Saturday, February 6, 2010

சுகம்.........

தந்தைக்கு தனது
குழந்தை சுகம்...
தாய்க்கு அதன்
மழலைப் பேச்சு சுகம்...
குழந்தைகளுக்கு
உலகம் சுகம்...
மாணவர்களுக்கு
மதிப்பெண் சுகம்...
காளையர்க்கு
காதல் சுகம்...
காதலிக்கு
காதலன் சுகம்...
காதலனுக்கு
காதலியைத் தீண்டி வரும்
தென்றல் சுகம்...
கணவனுக்கு
மனைவி சுகம்...
மனைவிக்கு கணவனின்
சுகமே சுகம்...
விலைமகளுக்கு
அவளின் விலை சுகம்...
படைப்பாளிக்கு அவனது
படைப்பு சுகம்...
ஏய்ப்பவனுக்கு ஏழைகளின்
உழைப்பு சுகம்...
பாட்டாளிக்கு
அரைவயிற்று கூழே சுகம்...
சிந்தனையாளனுக்கு
இவர்களைப் பற்றி
சிந்திப்பதே சுகம்....
-நம்பி

2 comments:

  1. ellaam sukam. sukame sukam. arumai ...ungkal kavithaikku karuththituvathe sukam. valththukkal.

    ReplyDelete
  2. தங்களது வாழ்த்து எமக்கு சுகம் மற்றும் ஊக்கம் நன்றி அய்யா...

    ReplyDelete