மயக்கும் மாலைப்பொழுது சலசலவென்று பசுமைக்கு பரணி பாடிவரும் தாமிரபரணி ஆற்றங்கரை, ஆளரவமற்ற தென்னை,மா,பலா மற்றும் பச்சை பசேல் என்று ஆளுயுர புல்வெளி நிறைந்த அந்தக் கரையோரத் தோப்பின் ஓர் ஓரமாய் எதையும் தாங்கும் இதயம் கொண்ட அவன், இன்று மதியம் தன் வீட்டினுள் கண்ட காத்சியின் பாதிப்பைத் தாங்க முடியாமல், தென்றலின் மயில்தோகை தழுவலில் காயம்பட்ட தன் இதயத்தை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான். சே... என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். இத்தனை காலம் தன்னுள் எழாத எண்ணம், சொல்லப்போனால் எழவிடாது அடக்கி ணைத்வைத்த எண்ணம் ஆழிப்பேரலையாய் சீறி அவனையும் அவன் மனதையும் அலைக்கழித்த அந்தக் காட்சி, விதியின் விளையாட்டு என்றேக் கூறலாம்.
என்றைக்கும் அலுவலகம் முடிந்து மாலையில் வீடுதிரும்பும் அவன் அன்று அலுவலகம் அருகே ஏற்பட்ட திடீர் கலவரம் காரணத்தால் மதியமே வீடு திரும்பிய போதுதான் அந்த காட்சியினை கண்டான். அவனின் அழகிய மனைவியின் பட்டுப்போன்ற மடியில் அவன் படுத்திருக்க அவள் கண்ணா, என் மன்னா எனக் கொஞ்சு மொழிபேசி ஊட்டி விட்டதை கண்டு சத்தமேதும் செய்யாது வெளியேறி வந்தவன் மணி ஆறாகியும் கல்லாய் சமைந்திருந்தான். கூட்டிற்குத் திரும்பியத் தாய்ப் பறவைகள் தன் இணையையும், குஞ்சுகளையும் தேடிக் கொடுத்த குரலால் கலைந்தவன் ஏதோ எண்ண உந்துதலால் வீடு திரும்பினான். வெகுநேரமாகியும் கணவனை காணாததால் வாசலில் அவன் மனைவி காத்திருந்தாள். வீடு திரும்பியவன் வாசலில் காத்திருந்த மனைவியைக் கண்டதும் தலைகுனிந்தவாறு வீட்டினுள் நுழைந்தவனை கண்டுக் கலங்கி குழம்பியபடி அவனருகே சென்று ஆதரவாய் அணைத்தபோது கலங்காத நெஞ்சம் கொண்ட அவனின் கண்கள் கலங்கியதை கண்டு அதிர்ந்தவள் அவனருகே அமர்ந்து அன்பாய் ஏன் ஏதோ பறிகொடுத்தாற்போல் கலங்கிப் போய் உள்ளீர்கள் என்று ஆதரவாய் வினவியவுடன் மடை திறந்த வெள்ளமாய் கண் நிறையக் கண்ணீரோடு அவள் மடிசாய்ந்து கதறினான். பின் சற்றே தன்னை நிதானமாக்கிக் கொண்டு, மதியம் தான் வீட்டிற்கு வந்தபோது நம்மகனை மடியிலிட்டு கொஞ்சியதைப் பார்த்தேன். அனாதையாகவே வளர்ந்துவிட்ட எனக்கு தாயன்பிற்கு ஏங்கிய காலங்களை எண்ணியபோது மனம் வெதும்பி உடைந்து போனதைக் கூறயதும், நீங்களும் எனக்கொரு குழந்தைதானே எனக்கூறி ஆதரவாய் மடியிலிட்டு அன்பாய் தழுவினாள். அவனும் ஆதரவான தாரம் மட்டுமில்லை அன்பானத் தாயும் கிடைத்தாள் என்றே நெடுநாள் ஏக்கம் துறந்து அமைதியாய் உறங்கினான். உறங்கிய அவன் கண்களில் கண்ணீர், ஆனால் இது தாயன்பு கிடைத்ததால் வந்த ஆனந்தக்கண்ணீர்....
அருமை .....!
ReplyDelete